நான் ஒரு அற்ப ஜந்து. எனது அறிமுகத்தை விட, யாம் உங்களுக்குக் கொடுக்கப் போகும் செய்தி மிக முக்கியமானது. நம் மீட்பராகிய இயேசு கிறீஸ்து, உலக வாழ்க்கையை நிறைவு செய்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. 1800 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட எமது சமயப்பிளவு இன்று ஏனைய சமயத்தவர்கள் எள்ளி நகையாடும் அளவுக்கு கேவலமாகப் போயுள்ளது. Protestant, Anglican, Orthodox, Church of England என்று ஆரம்பித்த பிளவு இன்று இயேசு அழைக்கிறார், இயேசு ஜீவிக்கிறார், இயேசு படுக்கிறார் என்று 1000 கிளைகளை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவத்திலுள்ள சாதாரண சந்தேகங்களை தீர்க்க முடியாத காரணத்தால், மேற்கத்தைய நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள், தேவாலயம் செல்வதை நிறுத்தி இந்தியா, நேபால், ஹிமாலயம் ஆகிய இடங்களை நோக்கி ஞானத்தைத் தேடிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளார்கள். வளர்ந்து வரும் நாடுகளில் வாழும் நாம் மந்திகள் போல் மரம் தாவுகின்றோம்.
இயேசு எம்மை விட்டு விடைபெறும் போது எமக்கு நெருப்பினால் ஞானஸ்நானம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். பரிசுத்த ஆவியை எமக்கு அனுப்புவதாக கூறிச்சென்றார். பரிசுத்தாவி எம்மிடம் இருந்திருந்தால் நாம் இவ்வாறு சீரழிந்திருக்கமாட்டோம். எமக்குள்ள எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைத்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக எமக்கு நெருப்பினால் ஞானஸ்நானம் கிடைத்திருக்கும். எத்தனையோ விடையங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நீங்கள், பரிசுத்தாவியானவரைப் பற்றி கையளவு கூட அறிந்து வைத்திருக்க வில்லை.
கடவுளின் அரசு நெருங்கிக் கொண்டிருப்பதால், உங்களை மீட்பதற்காக காக்கும் கடவுளாகிய தேவன் இன்று உங்களிடம் வந்துள்ளார். இந்த முகநூல் வாயிலாக உங்களுக்கு கொடுக்கப்படும் அனைத்து விடயங்களும் உங்களுக்குப் பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் ஆதாரத்தோடு கொடுக்கப்படும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று சொன்னார். உன்னிடம் இருக்கும் நல்லதை ஏழைகளுக்கு கொடு என்றார். எதிரிகளை அன்பு செய் என்று வற்புறுத்தினார். இவ்வாறான கருத்துக்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டால், “இந்த மாதிரி கால கட்டத்தில் இதெல்லாம் எப்படி சாமியோ சாத்தியமாகும்” என்று கேட்பீர்கள். “இயேசுவைப் பற்றி அவதூறாகப் பேசினாலே சங்கறுத்திடமாட்டோமா” என்று ஆதங்கப்படுவீர்கள். இப்படியான இயேசுவின் உண்மையான போதனைகள் உங்களுக்கு மன உளைச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்தலாம். எம்முடைய கருத்துக்களில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். உங்களிடம் மேலதிக விடயம் இருந்தால் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதை விடுத்து இந்த facebook page ல் இருந்து வெளியேற வேண்டாம். இந்தப் பக்கத்தில் வரும் சகல விபரங்களும் உலகில் உள்ள சகல தமிழ் பேசும் கிறிஸ்தவனுக்கும் போய்ச்சேர வேண்டும். ஆகவே, முடிந்தளவு இந்தப் பக்கத்தில் வரும் ஒவ்வொரு செய்திகளையும் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
எமது நோக்கம் ஒரு புதிய சபையை உருவாக்குவது அல்ல. உண்மையான இயேசு யார்? அவர் ஏன் இந்த உலகிற்கு வந்தார்? இயேசுவின் கட்டளைகளை எவ்வாறு பின்பற்றுவது? அதன் மூலமாக எவ்வாறு நாம் மீட்படைவது? என்று விளக்கிக் கூறுவதே எமது குறிக்கோளாகும். இங்கு உங்களுக்குப் பலதரப்பட்ட அதிர்ச்சிகளும், எதிர்பாராத செய்திகளும் காத்திருக்கின்றன. வாசித்து வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள்.
No reviews yet. Be the first to add a review.